சாரதா ஆசிரமத்தில் சண்டி ஹோமம்!
உளுந்தூர்பேட்டை: உலக அமைதி, உலக நன்மை, தர்மம் உண்டாகவும் உளுந்தூர்பேட்டை சாரதா ஆசிரமத்தில் சண்டி ஹோமம் நடந்தது. <உளுந் தூர்பேட்டை சாரதா ஆசிரமத்தில் வரும் 25ம் தேதி முதல் 3ம் தேதி வரை நவராத்திரி விழா நடக்கிறது. இதையொட்டியும் உலக அமைதி, உலக நன்மை, தர்மம் உண்டாகவும் சண்டி ஹோமம் நடந்தது. நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு பூர்வாங்க பூஜை, நேற்று காலை 5.30 மணிக்கு கணபதி ஹோமம் நடந்தது. பின் கோ பூஜை, சுமங்கலி பூஜை, கன்யாக பூஜை, வடு பூஜைகள் நடந்தது. பூஜைக்கு ராமகிருஷ்ண மட தலைமை சுவாமிஜி ஸ்ரீமத் அனந்தானந்தமகராஜ், சாரதா ஆசிரம தலைமை மாதாஜி ராமகிருஷ்ண பிரியா அம்பா தலைமை தாங்கினர். பாதூர் அருணாச்சல குருக்கள் முன்னி லையில் சண்டி ஹோமம் பூஜைகள் நடந்தது. சாரதா அம்பாள், லலிதா பரமேஸ்வரி அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பூஜையில் சிறப்பு விருந்தினர்களாக கடலூர் எஸ்.பி., ராதிகா, கூடுதல் எஸ்.பி., வெங்கடாசலம் கலந்து கொண்டனர்.