வால்பாறை துர்க்கை அம்மனுக்கு சிறப்பு பூஜை!
ADDED :4071 days ago
வால்பாறை: வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் எழுந்தருளியுள்ள துர்க்கை அம்மன், சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலி த்தார். வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் காசிவிஸ்வநாதர் ஆலயம் அமைந்துள்ளது. ஆலயத்தின் இடது புறத்தில் எழுந்தரு ளியுள்ள துர்க்கை அம்மனுக்கு செவ்வாய்க்கிழமை தோறும் சிறப்பு அபிேஷக பூஜையும், அலங்கார பூஜை நடக்கிறது. நேற்றுமுன்தினம் மாலை 4.00 மணிக்கு நடந்த சிறப்பு பூஜையில், அம்மனுக்கு பல்வேறு வகையான அபிேஷக பூஜைகள் நடந்தன. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பூஜையில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.