கள்ளக்குறிச்சியில் உறியடி உற்சவம்!
ADDED :4148 days ago
கள்ளக்குறிச்சி: கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி கள்ளக்குறிச்சி பெருமாள் கோவில் முன்பு உறியடி உற்சவம் நேற்று நடந்தது. கள்ளக்குறிச்சி தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி உற்சவம் நடந்தது. கிருஷ்ண பகவானுக்கு அபி ஷேக, ஆராதனை செய்தனர். கிருஷ் ணனை அலங்கரித்து யானை மற்றும் குதிரை பரிவாரங்களுடன் ஊர்வலம் வந்து பெருமாள் கோவில் முன்புள்ள மண்டபத்தில் எழுந்தருள செய்தனர். பெருமாள் கோவில் தெரு, கடைவீதி, கவரைத்தெரு, மந்தைவெளி பகுதிகளில் பக்தர்கள் உறியடித்தனர்.