சிருங்கேரி மடத்தில் வரும் 24ல் நவராத்திரி வழிபாடு துவக்கம்!
ADDED :4092 days ago
தி.நகர் : தி.நகர் சிருங்கேரி மடத்தில், நவராத்திரி சிறப்பு வழிபாடுகள், வரும் ௨௪ம் தேதி துவங்குகிறது. மேற்கு மாம்பலம், கிருபா சங்கரி தெரு, ஜகத்குரு சிருங்கேரி சங்கர மடத்தில், வரும் ௨௪ம் தேதி, நவராத்திரி சிறப்பு வழிபாடு துவங்குகிறது.இதையொட்டி, தினமும் காலை ஹோமங்கள், அபிஷேகம், ஆராதனை, வாகன அலங்காரம், பூஜைகள், மாலையில், இன்னிசை கச்சேரி என, நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன.இந்த சிறப்பு வழிபாடு அக்.4ம் தேதி நிறைவு பெறுகிறது. அதற்கான ஏற்பாடுகளை, மடத்தின் நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர்.