கரூர் ஈஸ்வரன் கோவிலில் பிரதோஷ வழிபாடு!
ADDED :4033 days ago
கரூர்: கரூர் ஈஸ்வரன் கோவிலிலுள்ள நந்திக்கு பிரதோஷம் முன்னிட்டு பல்வேறு அபிஷேகம் நடந்தது. குளித்தலை, கடம்பர்கோவில் மற்றும் லாலாபேட்டை அடுத்த சிவாயம் சிவபுரீஸ்வரர் சிவன் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது. முன்னதாக, குளித்தலை காவிரியில் இருந்து புனித தீர்த்தம் கொண்டு வரப்பட்டு நந்திக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. மேலும், பால், தயிர், பன்னீர், பழரசம், திரவியப் பொடி போன்றவற்றால் அபிஷேகம் நடந்தது. பிரதோஷம் முன்னிட்டு, நந்தியம்பெருமான் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சிவாயம், வலையபட்டி, குளித்தலை, பஞ்சப்பட்டி, அய்யர்மலைக்கு உட்பட்ட நூற்றுக்கணக்கான பக்தர்கள், நந்தியம்பெருமானை வழிபட்டனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.