கிருஷ்ணர் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
ADDED :4193 days ago
சிறுகடம்பூர் கிருஷ்ணர் கோவிலில் புரட்டாசி சனிக் கிழமையை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. செஞ்சி சிறுகடம்பூரில் உள்ள பாமா, ருக்மணி சமேத கிருஷ்ணர் கோவிலில் நேற்று முன்தினம் புரட்டாசி சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடந்தது. அன்று மாலை சாமிகளுக்கு சிறப்பு திருமஞ்சனமும், சிறப்பு அலங்காரமும் செய்தனர். இரவு 7 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் பாமா, ருக்மணி சமேத கிருஷ்ணருக்கு ஊஞ்சல் சேவை நடந்தது. பக்தர்களுக்கு பிரசாத விநியோகம் செய்தனர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.