உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழமை மாறாமல் நீராழி மண்டபம்: புனரமைக்க நடவடிக்கை தேவை!

பழமை மாறாமல் நீராழி மண்டபம்: புனரமைக்க நடவடிக்கை தேவை!

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் தெப்பக்குளம் சீரமைக்கும் பணியில் குளத்தின் மத்தியில் இருக்கும் நீராழி மண்டபம் பழமை மாறாமல் புதுப்பிக்க  அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். திருக்கோவிலூரை புராதான நகரமாக முதல்வர் ஜெ., அறிவித்தார். இதற்காக பக்தர்களுக்கான வசதிகள்,  புராதான சின்னங்கள், குளம், கழிவுநீர் கால்வாய், நடைபாதை அமைக்க ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கி உத்தரவிட்டார். இதன் ஒரு பகுதியாக தெப் பக்குளம் சீரமைக்க 40 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. முதன்மை செயலாளர் கண்ணன் மேற்பார்வையில் இப்பணிகள் நடந்து வருகிறது. குளத்தின்  படிக்கட்டுகள் பழைய கற்களை கொண்டு சீரமைத்ததால்  ஒழுங்கின்றி இருப்பது பற்றி சமீபத்தில் நேரில் ஆய்வு செய்த முதன்மை செயலாளர் அதி ருப்தி தெரிவித்தார். குளத்தின் மத்தியில் கருங்கற்களால் கட்டப்பட்டு சிதிலமடைந் திருக்கும் நீராழி மண்டபத்தை சீரமைப்பதும் இத்திட்டத்தில் இடம்  பெற்றுள்ளது. இதனை கான்கிரீட் துõண்கள் மூலம் கட்ட பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. இதனை நிறுத்த முதன்மை செலயலார்  உத்தரவிட்டார். குளத்தில் நீர் நிரம்பி ததும்பும்போது, குளத்திற்கு மத்தியில் அமைந்திருக்கும் நீராழி மண்டபம், குளத்திற்கு மேலும் அழகு சேர்க்கும்  வகையில் இருக்கும். பிரம்மோற்சவ விழாவின் நிறைவாக தெப்ப உற்சவத்தின் போது, சுவாமி நீராழி மண்டபத்தை சுற்றி வந்து விடையாற்றி  நடக்கும். பழமை மாறாமல் நீராழி மண்டபத்தை அதே கருங்கற்களை கொண்டே கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !