அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்!
ADDED :4405 days ago
புதுச்சேரி: சின்ன சுப்ராயப்பிள்ளை வீதி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில், ஊஞ்சல் உற்சவம் நடந்தது. புதுச்சேரி சின்ன சுப்ராயப் பிள்ளை வீதியில் உள்ள, அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில், மஹாளய அமாவாசையை முன்னிட்டு, ஊஞ்சல் உற்சவத்திற்கு நேற்று ஏற்பாடு செய் யப்பட்டது.மாலை 6.00 மணிக்கு, மஹாளய அமாவாசை பூஜை நடந்தது. இரவு 10.30 மணிக்கு துவங்கி, 12.30 மணி வரை, ஊஞ்சல் உற்சவம் நடந் தது.விழாவில் முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் ராஜவேலு பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தார்.ஏராளமான பக்தர்களும் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு விஜயகுமார் மற்றும் தனி அதிகாரி செய்திருந்தனர்.