ஸ்ரீவி.,வடபத்ரசாயி கோயில் பிரம்மோற்சவ விழா துவக்கம்!
ADDED :4079 days ago
ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ரசாயி கோயிலில் புரட்டாசி பிரம்மோற்சவ விழா இன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதையொட்டி காலை 9.30 மணிக்கு கருடக்கொடி நான்கு மாட, ரதவீதிகள் சுற்றி கொண்டு வரப்பட்டு கொடிமரத்தில் ஏற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடக்கிறது. விழா நாட்களில் இரவு சந்திர பிரபை, அனுமார், தங்க கருட வாகனம்,அன்ன வாகனம், யானை, குதிரை வாகனங்களில் சுவாமி வீதி உலா நடக்கிறது.விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 9ம் நாளான திருவோண நட்சத்திரத்தன்று காலை 7மணிக்கு சுவாளி திருத்தேரில் எழுந்தருள தேரோட்டம் நடக்கிறது. 10ம் நாளன்று சப்தாவரணம், வேதபிரான்பட்டர் புராணம் படித்தல் நடக்கிறது.கடைசி நாளன்று கோபால விலாசத்தில் புஷ்பயாகம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் ராமராஜா ஊழியர்கள் செய்து வருகின்றனர்.