இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைபணி மன்றத்தின் 152வது உழவாரப்பணி!
ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைபணி மன்றத்தின் முதலாவது திருப்பணி 20-01-2001 அன்று நெடுங்குன்றம் திரிபுர சுந்தரி உடனுரை அகத்தீஸ்வரர் திருக்கோவில் நடைபெற்றது. சென்னை மற்றும் அதன் அருகில் உள்ள மாவட்டங்களில் உள்ள கோவில்களில் பிரதி மாதம் 4வது ஞாயிற்றுக்கிழமை காலை 8-00 மணி முதல் மாலை 6-00 மணி வரை உழவாரப்பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சென்னையில் இருந்து அடியார்கள் பகுதி வாரியாக வாகனம் அமைத்து உழவாரப்பணி நடைபெறும் ஊருக்கு வந்தடைவார்கள். உழவாரப்பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் கோவில் பராமரிப்பு அற்ற நிலையில் மற்றும் நித்தி<ய பூஜை நடைபெறாத நிலையில் உள்ள ஆலயங்களை பார்வையிட்டு விவரம் அறிந்து அனைத்து அடியார்களுக்கும் நோட்டீஸ் மூலமாக தெரிவிக்கப்படும். அக்கோவில் பிரகாரம் சுத்தம் செய்தல், சுண்ணாம்பு அடித்தல், பிரகாரத்தில் தேவாரம், திருவாசகம், திருமுறை பாடல்களை எழுதுதல் போன்ற பணிகளை மேற்கொள்வோம். இதுவரை 151 கோவில்களில் உழவாரப்பணி செய்<யப்பட்டுள்ளது.
இந்த உழவாரப்பணியில் இன்று 600க்கும் மேற்பட்ட அடியார்கள் சென்னையில் இருந்து கலந்து கொண்டு நடந்து வருகிறது. திருநாவுக்கரசர் என்ற அப்பர் பெருமானால் துவங்கப்பட்ட உழவாரப்பணியை தொடர்ந்து அடியார்களுடன் உழவாரப்பணியில் கலந்து கொள்ள விரும்பும் அன்பர்கள் அனைவரும் வருகை தந்து இறைபணி செய்து இறைவனின் திருவருள் பெறலாம்.
28-09-2014 அன்று 152 வது உழவாரப்பணி:
அருள்மீகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ ஜம்புலிங்கேஸ்வரர் திருக்கோயில்
செம்பாக்கம், சென்னை (தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி செல்லும் வழியில் காமராஜர்புரம் பஸ்ஸ்டாப்)
காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை உழவாரப்பணி மதி<யம் 2 மணிக்கு அடியார் தமை அமுது செய்வித்தல் தொடர்ந்து உழவாரப்பணி திருக்கூட்டம். மாலை 5 மணிக்கு அடியார் பெருமக்கள் அனைவரும் இறைவர் திருமுன்பு கூட்டு வழிபாடு அதற்க்குரி<ய அடியார்கள் அனைவரும் ஒன்றாக புறப்பட வேண்டும்.
புறப்படும் இடங்கள்
*வடபழநி(வேங்கீஸ்வரர் திருக்கோயில்)
*பெருங்களத்துõர்(ஐ. ஓ.பி பேங்க் வாசல்)
*பெரம்பூர் ரமணா நகர்(துர்கா மெடிக்கல்ஸ்)
*சூளைமேடு பஜனை கோயில்
*அனகாபுத்துõர்(முருகன் கோயில் அருகில்)
*கோ<யம்பேடு(குறுங்காலீஸ்வரர் திருக்கோயில்)
*அம்பத்துõர்(கணேஷ் டிம்பர் அருகில்)
*பவுஞ்சூர்(செய்யூர் தாலுக்கா)
*நெற்குன்றம்(வெங்கா<ய மண்டி பஸ் நிறுத்தம் அருகில்)
*ஆற்காடு ரோடு(மாதா அமிர்தானந்தாமயி மடம் எதிரில்)
இறைபணியில் எம்.எப். ஜே லயன். எஸ். கணேசன் ,உழவாரப்பணி 9840123866