உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திண்டிவனம் கோவிலில் நவராத்திரி கொலு வழிபாடு!

திண்டிவனம் கோவிலில் நவராத்திரி கொலு வழிபாடு!

திண்டிவனம்: திண்டிவனம் மரகதாம்பிகை சமேத திந்திரிணீஸ்வரர் கோவிலில் நவராத்திரி விழா கொலு கண்காட்சி நடந்தது. திண்டிவனம் மரகதாம் பிகை சமேத திந்திரிணீஸ்வரர் கோவிலில் நவராத்திரி விழா கடந்த 24 ம் தேதி  துவங்கியது. தொடர்ந்து தினந்தோறும் மாலை 7:30  மணிக்கு  அம்பாளுக்கு  பூஜையும், தீபாராதனையும் நடந்து  வருகிறது. விழாவில் கலந்து கொள்ளும் பெண் பக்தர்களுக்கு மங்கல பொருட்கள் பிரசாதமாக  வழங்கபடுகிறது. பூஜைகளை ராதா குருக்கள், பாலாஜி குருக்கள் செய்து வருகின்றனர். தசமி அன்று  108 விளக்கு பூஜை நடக்க உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !