உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிதம்பரத்தில் மங்கள மகா சண்டி யாகம்!

சிதம்பரத்தில் மங்கள மகா சண்டி யாகம்!

சிதம்பரம்: சிதம்பரத்தில் நவராத்திரி விழாவையொட்டி 9 நாட்கள் சர்வ மங்கள மகா சண்டி யாகம் நடக்கிறது. ஸ்ரீ பால மகா திரிபுரசுந்தரி சத் கை ங்கர்ய மண்டலி சார்பில் சிதம்பரம் வடக்கு வீதியில் 13ம் ஆண்டு சர்வ மங்கள மகா சண்டி யாகம் நேற்று முன்தினம் துவங்கியது.  நவராத்திரியை  முன்னிட்டு 9 நாட்கள் நடைபெறும் இந்த யாகம் செல்வரத்ன தீட்சிதர் தலைமையில் நடக்கிறது. கடந்த 25ம் தேதி துவங்கிய யாகம் வரும் 3ம் தேதி  வரை நடக்கிறது.  கல்வி வளர்ச்சி, நோயற்ற வாழ்வு, கடன் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் தீர இந்த யாகம் நடத்தப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !