திருப்பதியில் சேவை செய்ய வாய்ப்பு!
ADDED :4028 days ago
மதுரை: பிரமோத்சவ விழா முடிந்த பின், திருப்பதி ஏழுமலையானுக்கு புஷ்பயாகம், அர்ச்சனை நடைபெறும். இதையொட்டி பல்வேறு மாநிலங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட 18 ரக மலர்களை, பக்தர்கள் ஊர்வலமாக கோயிலுக்கு கொண்டு செல்வர்.இதில், யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம். அக்.,31ல் நடக்கும் புஷ்ப யாகத்திற்காக, மதுரை ஸ்ரீவாரி சேவா குழுவினர் அங்கு சென்று, 7 நாட்கள் தங்கி சேவை செய்கின்றனர். பங்கேற்க விரும்புவோர் குழுத் தலைவர் ராம்லாலை 98431 84179ல் தொடர்பு கொள்ளலாம்.