உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமபாணத்தால் காலியான வாலி!

ராமபாணத்தால் காலியான வாலி!

வானர தலைவன் வாலிக்கு எதிராக, போர் புரிந்த யாரும் வெற்றி பெற்றதாக சரித்திரமில்லை. நேரில் யார் நின்று போர் புரிந்தாலும் எதிரில் இருப்பவரின் பாதி பலம் தனக்கு வரவேண்டும் எனும் சக்தியால், அவனுக்கே வெற்றி வாய்த்தது. அப்படியிருக்கையில், ஒரு முறை தன் முழு கவனத்தையும் போரில் செலுத்திக் கொண்டிருந்த வாலியை, ராமன் மறைந்திருந்தபடி அம்பெய்தி சாய்த்துவிட்டார்.

ராமா..! என்ன பாவம் செய்தேன் நான். என் தம்பி சுக்ரீவனிடம் சண்டையிட்டதும், அவன் மனைவியை கவர்ந்ததும் தவறே என்றாலும், அது எங்கள் இருவருக்குமான சண்டை. இடையில் நீ என்னை மாய்க்க, உனக்கு என்ன உரிமை இருக்கிறது? என் தம்பியுடன் சேர்ந்து என்னை சாய்த்து விட்டாயே... ராமாயணத்தில் நெஞ்சை உலுக்கும் பகுதி இது. வீரமும், பக்தியும் தன்னகத்தே கொண்ட வாலி எனும் சிறந்த வானர தலைவன், சாவின் விளிம்பில் வீழ்ந்து கிடக்கையில், ராமனைப் பார்த்து கேட்ட கேள்விகள் தான் இவை...கோவை, அவினாசிலிங்கம் பல்கலையில் நேற்று நடந்த, யக்ஷகான நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவிகள், அனைவருக்கும் இக்கதை நன்றாக புரிந்திருக்கும். ராமாயணத்தில் இடம்பெறும் வாலிவதைப்படலம் காட்சிகளை தத்ரூபமாக நிகழ்த்திக் காட்டினர், கர்நாடகாவைச் சேர்ந்த ஸ்பிக்மாகே கலைஞர்கள். கர்நாடக மற்றும் இந்துஸ்தானி இசையில், இசை, நடனம், பாவனை, வசனம் என கலைஞர்கள் அசத்த, அரங்கமே ஆச்சர்யத்தில் ஸ்தம்பித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !