காசிவிஸ்வநாதர் கோவிலில் நவராத்திரி விழா துவக்கம்!
ADDED :4078 days ago
வேதாரண்யம்: வேதாரண்யம் நாகை ரஸ்தாவில் உள்ள விசாலாட்சி சமேத காசிவிஸ்வநாதர் திருக்கோவிலில் நவரத்திரி கொலு பூஜை துவங்கியது.இதையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. நவராத்திரி கொலுவில் வினாயகர், சரஸ்வதி, லெட்சுமி, சிவபெருமான் பார்வதி, உருவ பொம்மைகள் இடம்பெற்றிருந்தன. கொலுவில் கலந்துகொண்ட பெண்கள் நவராத்திரி கொலு பாடல்களை பாடினர். வேதாரண்யம் வீரமாகாளியம்மன் கோவில், தோப்புத்துறை காளியம்மன் கோவில் நவராத்தி கொலு பூஜை நடைபெற்றது.