உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முத்தாலம்மன் கோயில் திருவிழா

முத்தாலம்மன் கோயில் திருவிழா

கூடலூர்: கூடலூரில் முத்தாலம்மன் கோயில் திருவிழாவில், நூற்றுக்கணக்கான பெண்களின்முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. கூடலூர் முத்தாலம்மன் கோயில் திருவிழா கொண்டாடப்பட்டது. அதிகாலையில் பெண்கள் மாவிளக்கு எடுத்தனர். அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. நூற்றுக்கணக்கான பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக சென்றனர். கரகாட்டம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கூடலூர் ஒக்கலிகர் சங்கம் செய்திருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !