உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நிரந்தர முதல்வராக ஜெ., வர தன்வந்திரி பீடத்தில் ஹோமம்!

நிரந்தர முதல்வராக ஜெ., வர தன்வந்திரி பீடத்தில் ஹோமம்!

வேலூர்: தமிழக முதல்வர் ஜெயலலிதா நீண்ட ஆயுளுடன் நிரந்தர, தமிழக முதல்வராக இருக்க வேண்டியும், இன்று பெங்களூரு நீதிமன்றத்தில் வெளியாகும், சொத்து குவிப்பு வழக்கில், அவர் நிரபராதி, என, தீர்ப்பளிக்கவும் வேண்டி, வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் சிறப்பு ஹோமம் நடந்தது.முரளிதர சுவாமிகள் தலைமையில், 10 சிவாச்சாரியார்கள் ஹோமத்தை செய்தனர். ஜெய துர்கா ஹோமம், பகுளா முகி ஹோமம், திருஷ்டிகள், தோஷங்கள், சத்ரு உபாதைகள் நீங்க நூற்றுக்கும் மேற்பட்ட மூலிகைகள், பழங்கள், புஷ்பங்கள், இனிப்புக்கள், காரங்கள், சின்ரா அன்னங்கள், கடுகு, உப்பு, மிளகாய் வற்றல் கொண்டு ஜெய துர்கா ஹோமம் நடந்தது. ஆற்காடு எம்.எல்.ஏ., சீனிவாசன், வேலூர் மாவட்ட ஊராட்சி தலைவர் (பொறுப்பு) அன்பழகன் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட அ.தி.மு.க.,வினர் கலந்து கொண்டனர். பூர்ணாஹூதியின் போது, தமிழக முதல்வர் ஜெயலலிதா நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழவும், தமிழகத்தின் நிரந்தர முதல்வராக இருக்க வேண்டியும், சிறப்பு கூட்டு பிரார்த்தனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !