பிரம்மோற்சவம்: திருப்பதிக்கு சிறப்பு ரயில்!
ADDED :4029 days ago
திருத்தணி: பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, வரும் 4ம் தேதி வரை திருப்பதிக்கு சிறப்பு ரயில் இயக்கப் படுகிறது. திருமலை திருப்பதியில் பிரம்மோற்சவம் நடந்து வருகிறது. இதை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக, ரயில்வே நிர்வாகம், நேற்று முதல் சிறப்பு ரயிலை இயக்கி வருகிறது. வரும் 4ம் தேதி வரை இந்த சேவை தொடரும். மாலை 3:00 மணிக்கு, அரக்கோணத்தில் இருந்து, எட்டு பெட்டிகள் கொண்ட பாசஞ்சர் ரயில், திருப்பதிக்கு புறப்படுகிறது. இது, திருத்தணி, புத்துார், ரேணிகுண்டா ஆகிய நிலையங்களில் மட்டும் நின்று செல்லும். மாலை 5:10 மணிக்கு திருப்பதி சென்றடையும். மறு மார்க்கத்தில், மாலை 5:20 மணிக்கு திருப்பதியில் இருந்து புறப்படும் பாசஞ்சர் ரயில், திருத்தணி, அரக்கோணம், பெரம்பூர் வழியாக இரவு 9:15 மணிக்கு சென்னை கடற்கரை ரயில் நிலையத்தை சென்றடையும்.