உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மழை வேண்டி சிறப்பு வழிபாடு

மழை வேண்டி சிறப்பு வழிபாடு

தர்மபுரி: தர்மபுரியில், மழை வேண்டி, சிறப்பு வழிபாடு நடந்தது. தர்மபுரி அதியமான் கோட்டையை அடுத்த தேவரூத்துப்பள்ளம் கிராமத்தில், தெய்வகன்னிமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் மழை பெய்ய வேண்டி மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தினர். இதை முன்னிட்டு ஸ்வாமிக்கு, பாலாபிஷேகம் நடந்தது. மேலும், ஸ்வாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பல்வேறு பூஜைகள் நடந்தன.பின், பொதுமக்கள், 200 களி உருண்டைகள் படையல் செய்து, கூழ் ஊற்றி அம்மனை வழிபட்டனர். பக்தர்களுக்கு களி உருண்டை பிரசாதமாக வழங்கப்பட்டது. இந்த சிறப்பு வழிபாட்டில் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் திரளாக பங்கேற்று, அம்மனை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !