தண்டாயுதபாணி கோவிலில் நவராத்திரி விழா
ADDED :4131 days ago
செஞ்சி: செஞ்சி தாலுகா தேவதானம்பேட்டை தண்டாயுதபாணி கோவிலில் கடந்த 24ம் தேதி முதல் நவராத்திரி விழா நடந்து வருகிறது. கோவில் வளாகத்தில் கொலு அமைத்து அம்மனுக்கு தினசரி வெவ்வேறு அலங்காரம் செய்து சிறப்பு பூஜையும், தீபாராதனையும் நடந்து வருகிறது. பக்தர்களுக்கு பிரசாத விநியோகம் செய்கின்றனர். நான்காம் நாள் விழாவில் சமயபுரம் மாரியம்மன் அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். பூ ஜைகளை அருட்பெருஞ்ஜோதி குருக்கள் செய்தார். விழா ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் செய்தனர். திரளான பக்தர்கள் கலந்துக் கொண்டனர்.