அவலூர்பேட்டையில் நவராத்திரி விழா
ADDED :4075 days ago
அவலூர்பேட்டை: அவலூர்பேட்டை ஆதிபராசக்தி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா 25 ம் தேதி துவங்கியது. விழாவை முன்னிட்டு சிறப்பு அ பிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. ஆதிபராசக்தி, தாய் மூகாம்பிகை, காமாட்சி அம்மன், மகா காளி உள்ளிட்ட அலங்காரங்களில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தினசரி நவதானியம், குங்குமம், காயத்ரி, சரஸ்வதி, மகாலட்சுமி, சந்தன காப்பு உள்ளிட்ட அலங்காரங்கள் நடக்க உள்ளன. கிராம மக்கள் திரளாக பங்@கற்றனர்.