சரஸ்வதி பூஜை முறை!
ADDED :4424 days ago
சரஸ்வதி பூஜையன்று, மாணவர்கள் தங்கள் புத்தகம், எழுதுபொருட்களை கலைமகளாகக் கருதி சந்தனம், குங்குமமிட்டு வழிபடுவர். இதற்கு ஏடு அடுக்குதல் என்று பெயர். தொழிலாளர்கள் தங்களின் கருவி, ஆயுதங்களை சுத்தம் செய்து அலங்கரித்து பூஜை செய்வர். சரஸ்வதி படத்தை பூக்களால் அலங்கரித்து விளக்கேற்றி பொரி, சுண்டல், பழம், பாயாச வகைகளைப் படைத்து வழிபடுவர். மறுநாள் விஜயதசமியன்று காலையில், அடுக்கிய புத்தகங்களுக்கு தீபதுõபம் காட்டி படிப்பர். இதனால், கல்வி, தொழிலில் வளம் பெருகும் என்பது ஐதீகம்.