சூசி ரகசியம்!
ADDED :4424 days ago
கங்கைகொண்ட சோழபுரத்தில் இருக்கும் சரஸ்வதி ஞானசரஸ்வதியாக விளங்குகிறாள். அர்த்த பத்மசானத்தில் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறாள். வலக்கையில் ஆள்காட்டி விரலை மட்டும் நீட்டி மற்ற விரல்களை மடக்கிநிலையில் சூசி முத்திரையுடன் இருக்கிறாள். கடவுளைப் பற்றி அறிவதே மேலானது என்பது இதன் பொருள். பூணுõல், ஜபமாலை, கமண்டலம், சுவடி, வளையல்கள் கலைநயத்துடன் காணப்படுகின்றன. சாந்த முகத்துடன் யோக நிலையில் இருக்கும் இவளை வழிபட ஞானம் கைகூடும்.