எழுத்துப்பயிற்சி துவங்குங்க!
ADDED :4424 days ago
நவராத்திரி காலத்தில் சரஸ்வதிக்கு பூஜைக்கு மறுநாள் கொண்டாடப்படுவது விஜயதசமி. இது வெற்றிக்குரிய நாளாக கருதப்படுகிறது. இந்நாளில் புதிதாக இசை, பாட்டு, நடனம் போன்ற கலைகளைப் படிக்கத் தொடங்கலாம். குழந்தைகளைப் புதிதாக பள்ளியில் இந்நாளில் சேர்ப்பது வழக்கம். அட்சர அப்யாசம் என்னும் எழுதும் வழிபாடு கோயில்களில் சிறப்பாக நடக்கும். கோயில்களில் விஜயதசமியன்று சுவாமியும், அம்மனும் குதிரைவாகனத்தில் வீதியுலா புறப்படுவர். அப்போது வன்னிமரத்தின் மீது அம்பு போடும் நிகழ்ச்சி நடக்கும். இந்த விழாவை பாரி வேட்டை என்பர். வன்னியை தல மரமாகக் கொண்ட கோயில்களில், அந்த மரத்துக்கே சிறப்பு பூஜை செய்வதுண்டு.