உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வடநாட்டில் ராம்லீலா!

வடநாட்டில் ராம்லீலா!

ராவணனால் சீதை இலங்கைக்கு கடத்தப்பட்டாள். மனைவியைப் பிரிந்த ராமர் சோகத்தில் ஆழ்ந்தார். அப்போது ராமரைக் காண வந்த நாரதர் நவராத்திரி விரத மகிமையை எடுத்துரைத்தார். ராமதுõதரான ஆஞ்சநேயர் பூஜைக்குரிய சாமான்களை வாங்கி வர, நாரதர் பூஜையை நடத்திக் கொடுத்தார். தரிசனம் அளித்த அம்பிகை ராவணனை வதம் செய்யும் ஆற்றலை ராமருக்கு வழங்கினாள். விஜயதசமியன்று ராவணனைக் கொன்ற ராமர், சீதையை அசோகவனத்தில் இருந்து மீட்டார். உத்தர பிரதேசம், பஞ்சாப், அரியானா போன்ற வடமாநிலங்களில் நவராத்திரி விழா ராம்லீலா என கொண்டாடப்படுகிறது. எதிரியை வெல்லும் பலம் பெறும் விதத்தில், பத்துதலை ராவணனின் உருவபொம்மையைத் தீயிட்டு கொளுத்தி வழிபடுவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !