உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அய்யப்பன் கோவிலில் கொலு பூஜை

அய்யப்பன் கோவிலில் கொலு பூஜை

தியாகதுருகம்: தியாகதுருகம் அய்யப்பன் கோவிலில் நவராத்திரி கொலு வைத்து பெண்கள் பூஜை நடத்தினர். தியாகதுருகம் கோட்டைகுளம் அருகில் உள்ள அய்யப்பன் கோவிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு கொலு வைத்து சுவாமி சிலைகளை வைத்து அலங்காரம் செய்தனர். தினமும் இரவு அம்மனை அலங்கரித்து பூஜைகள் நடத்தினர். குழந்தைகள் அம்மன் வேடம் அணிந்து பக்தி பாடல்களை பாடி தீபம் ஏற்றி வழிபட்டனர். நேற்று முன்தினம் 8ம் நாள் விழாவில் அம்மனை சாமுண்டி தேவியாக அலங்கரித்து சிறப்பு அர்ச்சனை செய்தனர். விழா நிறைவாக நடந்த மகாதீபாராதனையில் பக்தர்கள் தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !