ஜெ.,வுக்கு ஜாமின் கிடைக்க ஸ்ரீரங்கத்தில் சுதர்சன ஹோமம்!
ADDED :4020 days ago
திருச்சி : ஜெயலலிதாவிற்கு ஜாமின் கிடைக்க வேண்டும் என, ஸ்ரீரங்கத்தில் நேற்று, அ.தி.மு.க.,வினர், சுதர்சன ஹோமம் நடத்தினர். வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில், தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு, கர்நாடக மாநில சிறப்பு நீதிமன்றத்தில், சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அவரை, ஜாமினில் எடுப்பதற்கான மனு, இன்று, கர்நாடக மாநில உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. இதையடுத்து, ஜெயலலிதாவிற்கு ஜாமின் கிடைக்க வேண்டி, திருச்சி ஸ்ரீரங்கத்தில், அ.தி.மு.க., சட்டசபை கொறடா மனோகரன் தலைமையில், சுதர்சன ஹோமம் நடந்தது. நேற்று காலை, வேத விற்பன்னர்கள், ஹோமத்தை நடத்தினர். இதில், ஸ்ரீரங்கம் ஜீயர் சுவாமிகள் மற்றும் அ.தி.மு.க.,வினர் கலந்து கொண்டனர்.