உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ரசாயி கோயிலில் வேதபுராணம்!

ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ரசாயி கோயிலில் வேதபுராணம்!

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ரசாயி கோயிலில் புரட்டாசி பிரம்மோற்சவ விழாவையொட்டி வேதபுராணம் வாசித்தல் நடந்தது. கடந்த 26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கிய விழாவில் கடந்த 4ம் தேதி தேரோட்டம் நடந்தது. விழாவின் 10ம் நாளன்று சர்க்கரை குளத்தெரு வரதராஜ பெருமாள் சன்னதியில் மாலை 4 மணிக்கு வேத பிரான் பட்டர் அனந்தராமன் வேதபுராணம் படித்தார். தொடர்ந்து இரவு வெட்டி வேர் சப்பரத்தில் சுவாமி வீதியுலா நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !