புரட்டாசி பவுர்ணமி பாதயாத்திரை
ADDED :4019 days ago
காரைக்குடி: பாகம்பிரியாள் உழவாரப்பணிக்குழுவினர் சார்பில் 12ம் ஆண்டு புரட்டாசி பவுர்ணமி பாதயாத்திரை காரைக்குடி முத்தாலம்மன் கோயிலில் இருந்து நேற்று மாலை தொடங்கியது. இலுப்பக்குடி சுயம்புரீஸ்வரர், மாத்தூர் ஐநூற்றீஸ்வரர், உஞ்சனை திரிபுவன சுந்தரேஸ்வரர், கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர், திருவாடானை ஆதிரத்தினேஸ்வரர், மணிகண்டி பிருகண்டுமுனீஸ்வரர், படப்பை உலகநாயகி அம்மன், அரும்பூர் உத்தம பாண்டீஸ்வரர், திருவெற்றியூர் வால்மீகநாதர் என ஒன்பது கோயில்களுக்கு புரட்டாசி பவுர்ணமியை முன்னிட்டு பாதயாத்திரையாக அக்.,10 வரை இக்குழுவினர் செல்கின்றனர். இதில் பங்கேற்க, 93677 59360 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.