உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காளையார்கோவிலில் சொர்ணகாளீஸ்வரர் கோபுரங்களில் தீ!

காளையார்கோவிலில் சொர்ணகாளீஸ்வரர் கோபுரங்களில் தீ!

பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள, தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு,  ஜாமின் வழங்கப்பட்டதாக வெளியான தவறான  தகவலால் நேற்று, சிவகங்கை மாவட்டம்,  காளையார்கோவிலில், அ.தி.மு.க.,வினர் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.  பட்டாசு தீ ப்பொறி, சொர்ணகாளீஸ்வரர் கோவில் கோபுரங்களில், திருப்பணிக்காக  வேயப்பட்டிருந்த கூரை மீது விழுந்து, கூரை பற்றி எரிந்தது. அப்போது  திடீரென பெய்த மழையால், தீ ஓரளவு தணிந்தது.  இந்த விபத்தில், இரு கோபுரங்களிலும் மாடி கதவு நிலைகள் மற்றும் சிறிய  சுவாமி பொம்மைகள்  எரிந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !