உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மழை வேண்டி வருண பகவானுக்கு சிறப்பு பூஜை!

மழை வேண்டி வருண பகவானுக்கு சிறப்பு பூஜை!

மதுராந்தகம்: மதுராந்தகத்தை சுற்றியுள்ள பகுதிகளில் போதிய நீரின்றி, பயிர்கள் கருகி வருவதால், விவசாயிகள் மழை வேண்டி, வருண பகவானுக்கு  சிறப்பு பூஜை நடத்தினர். கடந்த இரண்டு ஆண்டுகளாக, பருவ மழை பொய்த்து போனதால், மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்கள் நீரின்றி  வறண்டுள்ளன. இதனால், விவசாயிகள் பயிரிட்ட பயிர்கள், போதிய நீர் வரத்தின்றி கருகி வருகின்றன. பல விவசாயிகள் பயிரிட முடியாமல்  பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், மதுராந்தகம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த நுாற்றுக்கும் மேற்பட்ட விவசாயி கள், நேற்று பிற்பகல் 1 மணியளவில், மழை வேண்டி, மதுராந்தகம் ஏரியில் சிவ லிங்கம் பிரதிஷ்டை செய்தனர். தொடர்ந்து லிங்கத்திற்கு சிறப்பு பூ ஜைகளும் வருண பகவானுக்கு சிறப்பு பூஜைகளும் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !