உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தீர்த்தீஸ்வரர் கோவிலில் பவித்ர உற்சவம் நிறைவு!

தீர்த்தீஸ்வரர் கோவிலில் பவித்ர உற்சவம் நிறைவு!

திருவள்ளூர்: திருவள்ளூர், திரிபுரசுந்தரி சமேத தீர்த்தீஸ்வரர் கோவிலில், நேற்று, மகா பூர்ணாஹூதியுடன் பவித்ர உற்சவம் நிறைவடைந்தது. ÷ காவில்களில் தினசரி நடத்தப்படும் பூஜைகளில், ஏதேனும் குறைகள் இருந்தால், அதை நிவர்த்தி செய்யக் கோரி, ஆண்டுதோறும் பவித்ர உற்சவம்  நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான பவித்ர உற்சவம் தீர்த்தீஸ்வரர் கோவிலில், கடந்த 3ம் தேதி துவங்கியது. தினமும், காலை 8:00 மணிக்கும்,  மாலை 6:00 மணிக்கும், யாக பூஜையும், பவித்ர சமர்ப்பணம், விசேஷ ஹோமம் நடைபெற்றது. கோவிலில் தீர்த்தீஸ்வரர் சன்னதியின் முன்புறம்  உற்சவர் தீர்த்தீஸ்வர் பிரியாவிடை அம்மனுடனும், உற்சவர் திரிபுரசுந்தரி அம்மனும் எழுந்தருளி யாக பூஜை நடைபெற்றது. நேற்று முன்தினம்,  மாலை 6:00  மணிக்கு, நடராஜர் அபிஷேகம் நடந்தது. நேற்று, காலை 8:00 மணிக்கு, யாகபூஜை சமர்ப்பணம் முடிந்து, இரவு 9:00  மணிக்கு, மகா பூர்ணாஹூதியுடன் பவித்ர உற்சவம் நிறைவடைந்தது. தினமும் ஏராளமான பக்தர்கள், யாக பூஜையில் கலந்து கொண்டு சிவனையும், அம்பாளையும்  வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !