உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வெங்கடேச பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்!

வெங்கடேச பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்!

ஊத்துக்கோட்டை : வெங்கடேச பெருமாள் கோவில் கும்பாபிஷேகம், வரும், 12ம் தேதி நடைபெற உள்ளது. ஊத்துக்கோட்டை அடுத்த, எல்லம்பேட்டை கிராமத்தில் உள்ளது ஸ்ரீதேவி, பூதேவி உடனுறை வெங்கடேச பெருமாள் கோவில். பழமை வாய்ந்த இக்கோவில், சிதிலமடைந்து காணப்பட்டது. பொதுமக்கள் பங்களிப்புடன் கோவில் சீரமைக்கும் பணி நடந்து முடிந்தது.வரும், 12ம் தேதி, கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. இதையொட்டி, வரும், 10ம் தேதி, காலை, கணபதி பூஜை, கணபதி ஹோமம், கோ பூஜை, புதிய சிலைகளுக்கு அஷ்டாதசகிரியைகள், மந்திரபுஷ்பம், முதல் கால யாக பூஜை, பூர்ணாஹூதி ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.மறுநாள், 11ம் தேதி இரண்டாவது கால யாக பூஜை, புதிய சிலைகள் பிரதிஷ்டை செய்தல், மூன்றாவது கால யாக பூஜை ஆகியவை நடைபெறும்.வரும், 12ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை காலை, நான்காவது கால யாக பூஜை, மகா சங்கமம் ஆகிய நிகழ்ச்சிகளும் தொடர்ந்து, மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !