திருநள்ளார் கோவிலில் முன்னாள் கவர்னர் சாமி தரிசனம்!
ADDED :4018 days ago
காரைக்கால்: திருநள்ளார் சனிஸ்வர பகவான் கோவிலில் முன்னாள் மேற்குவங்கள கவர்னர் நாரயணன் தனது குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார். காரைக்கால் திருநள்ளாரில் உள்ள சனிஸ்வர பகவான் கோவிலுக்கு நேற்று காலை மேற்குவங்கலாளம் முன்னால் கவர்னர் நாரயணன் கோவிலுக்கு வந்தார். இவரை தருமபுர ஆதீன கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள்,கோவில் நிர்வாக அதிகாரி பன்னீர்செல்வம் மற்றும் ஒ.என்.ஜி.சி., அதிகாரிகள் ஆகியோர் வரவேற்றனர். முன்னாள் கவர்னர் நாரயணன் தனது குடும்பத்துடன் சொர்ணகணபதி, சுப்ரமணியர், தர்பாரண்யேஸ்வரர், பிரணாம்பிகை அம்பாளை வழிப்பட்டு சனிஸ்வர பகவானை தரிசனம் செய்தார். சனிஸ்வர பகவானுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. பின், எள்தீபம் ஏற்றி வழிப்பட்டார்.