நாகையில் 5 ஆயிரம் பெண்கள் பால்குடம் பிராத்தனை!
நாகப்பட்டினம்: ஜெ.,விடுதலைக்காக நாகையில் நேற்று 5 ஆயிரம் பெண்கள் பால்குடம் எடுத்து ஐந்து கி.மீ.,துõரம் ஊர்வலமாக சென்று பால் அபிஷேகம் செய்தனர். பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவை விடுவிக்க வேண்டும்.ஜெ.,மீதான சிறப்பு கோர்ட் தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி,நாகை மாவட்டத்தில் கடந்த 27 ம்தேதியில் இருந்து, அ.தி.மு.க.,வினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று மாவட்ட அ.தி.மு.க.,மகளிரணி சார்பில்,நாகை வெளிப்பாளையம் ஏழைப்பிள்ளையார் கோவிலில் இருந்து 5 ஆயிரம் பெண்கள் பால் குடம் எடுத்து ஐந்து கி.மீ.,துõரம் ஊர்வலமாக சென்று,நாகை நெல்லுக்கடை மாரியம்மன் கோவிலில்,அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்தனர். இதற்காக தனியார் பால் நிறுவனத்தைச் சேர்ந்த டேங்கர் லாரியில் பால் கொண்டு வரப்பட்டு,பால் விநியோகம் செய்யப்பட்டது.