காளிங்கவராக சுவாமி திருக்கல்யாணம் கோலாகலம்!
ADDED :4017 days ago
பொதட்டூர்பேட்டை: ஸ்ரீதேவி, பூதேவி உடனுறை காளிங்கவராக சுவாமி திருக்கல்யாணம், நேற்று நடந்தது. பொதட்டூர்பேட்டை அடுத்த, மேல்பொதட்டூர் காளிங்கவராக சுவாமி கோவில் பிரம்மோற்சவம், நேற்றுடன் நிறைவடைந்தது. நேற்று காலை, ஸ்ரீதேவி, பூதேவி, காளிங்கவராக சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. மாலை, 6:00 மணிக்கு, சுவாமி, வியருடன் மணக்கோலத்தில் வீதியுலா எழுந்தருளினார்.