திருவுடையம்மன் கோவிலுக்கு ராஜகோபுரம்: பக்தர்கள் எதிர்பார்ப்பு!
மீஞ்சூர்: மீஞ்சூர் அருகில் உள்ள திருவுடையம்மன் கோவிலுக்கு, ராஜகோபுரம் அமைக்க வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர். மீஞ்சூர் அடுத்த, மேலுார் கிராமத்தில், திருமணங்கீஸ்வரர் திருவுடையம்மன் கோவில் உள்ளது. வெள்ளிக்கிழமைகளில் வரும் பவுர்ணமி நாட்களில் காலையில், 6:00 மணி முதல், பகல், 12:00 மணிக்குள், மேலுார் திருவுடையம்மனையும், பகல், 12:00 மணி முதல், மாலை, 6:00 மணிக்குள் திரு வொற்றியூர் வடிவுடையம்மனையும், மாலை, 6:00 மணி முதல், இரவு, 12:00 மணிக்குள் வடதிருமுல்லைவாயில் கொடியுடையம்மனையும் தரிசிப் பது உகந்தது என்பதால், அச்சமயங்களில் பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகமாகவே காணப்படும். இக்கோவிலுக்கு ராஜகோபுரம் இல்லை. இந்து சமய அறநிலைய துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில், 30 லட்சம் ரூபாய் செலவில், புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. கூடுதல் நிதி ஒதுக்கி, கோவிலுக்கு ராஜகோபுரம் அமைக்க வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர். இதுகுறித்து, பெயர் வெளியிட விரும்பாத அறநிலைய துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “கோவில் புனரமைப்பு பணிக்கு திட்ட அறிக்கை தயாரித்து, அரசின் பார்வைக்கு அனுப்பி உள்÷ ளாம். தனி நபர்கள் பங்களிப்புடன் ராஜகோபுரம் அமைக்கவும், திட்டமிட்டு வருகிறோம், என்றார்.