உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சொக்கநாதன் புத்தூர் மாரியம்மன் கோயில் தேரோட்டம்!

சொக்கநாதன் புத்தூர் மாரியம்மன் கோயில் தேரோட்டம்!

ராஜபாளையம் அருகேயுள்ள சொக்கநாதன் புத்தூர் மாரியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியாக வெள்ளிக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.
இக் கோயில் புரட்டாசி பொங்கல் திருவிழா கடந்த அக்டோபர் 1ஆம்தேதி கொடியேறத்துடன் துவங்கியது. தினசரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்கார பூஜை வழிபாடுகள் நடைபெற்றன.விநாயகர், வடகாசியம்மன், மாரியம்மன் அலங்கார வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். முக்கிய நிகழ்ச்சியான தேரோட்ட விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மனுக்கு பல்வேறு காணிக்கைகள் செலுத்தி வழிபாடு நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !