ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் கோபுரங்களில் வர்ணம் தீட்டும் பணி!
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் கோபுரங்களில் வர்ணம் தீட்டும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.வர்ணம் தீட்டப்படுகிறது108 வைணவ தலங்களில் முதன்மையானது, பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவது ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் ஆகும். இக்கோவில் கும்பாபிஷேகம் நடத்த தமிழக அரசு முயற்சி மேற்கொண்டு, திருப்பணிக்காக ரூ.10½ கோடி நிதி ஒதுக்கியது. அதைத்தொடர்ந்து திருப்பணி வேலைகள் தொடங்கி வைக்கப்பட்டு தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கோவிலில் 21 கோபுரங்கள் 7 பிரகாரங்கள் உள்ளன. கோபுரங்கள் அனைத்துக்கும் திருப்பணி செய்ய ஏதுவாக சாரம் கட்டி உள்ளனர். சிதிலமடைந்த சிலைகள் சீர்படுத்தப்பட்டு வருகின்றன. கோபுரங்களில் வர்ணம் தீட்டப்பட்டு வருகிறது. இந்த பணியில் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.ராஜகோபுரம்கோவிலில் உள்ள உபசன்னதிகளில் வர்ணம் தீட்டும் பணி நடந்து வருகிறது. உபசன்னதிகளின் மேலே உட்கார்ந்தபடி கைகளை கூப்பிய நிலையில் கருடாழ்வார் சிலைகள் வைக்கப்படுகின்றன. ராஜகோபுரம் தவிர மற்ற கோபுரங்களில் கலைநயத்துடனும் தெய்வீத்தன்மை உள்ள சிற்பங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. தற்போது அந்த ராஜகோபுரத்தில் உச்சியில் வர்ணம் தீட்டும் வேலைகள் தொடங்கும் முன்பாக கோபுரத்தை சுற்றிக்கட்டப்பட்ட சாரத்தில் கோபுரத்தை மறைக்கும்படி துணி கட்டப்படுகிறது. திருப்பணி வேலைகள் முடித்து அடுத்த ஆண்டு மார்ச் மாதம் கும்பாபிஷேகம் நடத்த அதிகாரிகள் இலக்கு நிர்ணயித்துள்ளார்கள். இதனால் திருப்பணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.