உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமலை திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க 22 மணி நேரம் காத்திருப்பு!

திருமலை திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க 22 மணி நேரம் காத்திருப்பு!

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் வெள்ளிக்கிழமை 22 மணி நேரம் காத்திருந்தனர்.திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் வெள்ளிக்கிழமை அதிகமாகக் காணப்பட்டது. தர்ம தரிசன பக்தர்கள் 22 மணி நேரமும், நடைபாதை பக்தர்கள் 11 மணி நேரமும் தரிசனத்துக்காகக் காத்திருந்தனர்.11 ஆயிரம் எண்ணிக்கையிலான ரூ.300 விரைவு தரிசன டிக்கெட்டுகள் இணையதள முன்பதிவு மூலம் வழங்கப்பட்டு விடுவதால், திருமலையில் உடனடிப் பதிவின் கீழ் 7 ஆயிரம் டிக்கெட்டுகள் மட்டுமே வழங்கப்படுகின்றன.அந்த டிக்கெட்டுகளும் காலை 9 மணிக்குள் கொடுக்கப்பட்டு விட்டதால், ரூ.300 விரைவு தரிசனம் 10 மணிக்கு மேல் ரத்து செய்யப்பட்டது.வெüள்ளிக்கிழமை அதிகாலை 3 மணிமுதல் மாலை 6 மணிவரை, 30,750 பக்தர்கள் ஏழுமலையானை தரிசித்தனர். வெüóளிக்கிழமை மாலை நிலவரப்படி, தர்ம தரிசன பக்தர்கள் 31 காத்திருப்பு அறைகளைக் கடந்து 2 கி.மீ. தொலைவிலும், நடைபாதை பக்தர்கள் 15 காத்திருப்பு அறைகளைக் கடந்து 1 கி.மீ. தொலைவிலும் ஏழுமலையானை தரிசிக்கக் காத்திருந்தனர். சனிக்கிழமை காலை 6 மணிக்கு ஏழுமலையான் தரிசனம் தொடங்க உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !