உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மத்தூர் சிவம் பட்டியில் மாரியம்மன் எழுந்தருளியதால் அதிசயம்!

மத்தூர் சிவம் பட்டியில் மாரியம்மன் எழுந்தருளியதால் அதிசயம்!

மத்தூர் அருகே சிவம் பட்டியில் உள்ள பூங்காவனத்து அம்மன் கோவில் அருகே பாம்பு புற்று உள்ளது. இந்த புற்றில் மாரியம்மன் எழுந் தருளியதாக பெண்கள் பால்குடங்களுடன் ஊர் வலமாக சென்று வழிபட் டார்கள்.பாம்பு புற்றுகிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள சிவம் பட்டியில் பிரசித்தி பெற்ற பூங்காவனத்து அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவி லில் மாதந்தோறும் அமா வாசை அன்று நடைபெறும் சிறப்பு பூஜையில் ஆயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இந்த கோவில் வளாகத் திலும், அருகில் உள்ள மைதானத்திலும் 10-க்கும் மேற்பட்ட பாம்பு புற்றுகள் உள்ளன.இதில் மாரியம்மன் சன்னதி அருகில் உள்ள ஒரு பாம்பு புற்றில் 5 தலை நாகத்தை பார்த்ததாக அப்பகுதியைச் சேர்ந்த சாமிநாதன்(வயது60), குப்புசாமி(60) மற்றும் கிருஷ் ணகவுன்டர்(70) ஆகியோர் கடந்த சில தினங்களுக்கு முன்பு கூறினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.பாலாபிஷேகம்இந்தநிலையில் சாமிநாதன் என்பவர் தனது கனவில் மாரியம்மன் தோன்றி, குறிப்பிட்ட அந்த பாம்பு புற்றில் எழுந்தருளி உள்ளதாகவும், வாரந்தோறும் செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பாம்பு புற்றுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டால் கிராம மக்களின் கஷ்டங்கள் நீங்கி வளம் பெருகும் என்று கூறியதாகவும் அப்பகுதி மக்களிடையே தெரிவித்துள்ளார்.இதையடுத்து, நேற்று வெள்ளிக்கிழமை என்பதால் திரளான பெண்கள் பூங்கா வனத்து அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தினர். பின்னர் அங்கிருந்து 111 பால் குடங்களுடன் ஊர்வலமாக புறப்பட்டு பாம்பு புற்றுக்கு வந்தனர். தொடர்ந்து பாம்பு புற்றுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டனர். அப் போது 30 பெண்கள் அருள் வந்து ஆடினர். இந்த சம்பவத் தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !