உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வைகுண்டபதி பெருமாளுக்கு ஐந்து கருட சேவை!

வைகுண்டபதி பெருமாளுக்கு ஐந்து கருட சேவை!

துாத்துக்குடி:துாத்துக்குடி வைகுண்டபதி பெருமாள் கோயிலில் புரட்டாசி கடைசி சனிக்கிழமையில், ஐந்து கருட சேவை நிகழ்ச்சி நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். துாத்துக்குடி வைகுண்டபதி பெருமாள் கோயிலில் புரட்டாசி திருவிழா நடந்தது.

இதில் ஒவ்வொரு சனிக்கிழமையும் பெருமாள் பல்வேறு அலங்காரங்களில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். கடைசி சனிக்கிழமையான நேற்று முன் தினம் காலை சுப்ரபாத பாராயணம், கோ பூஜை, திருப்பதி வெங்கடாஜலபதி பெருமாள் விஸ்வரூப தரிசனம் நடந்தது. இரவு 8:00 மணிக்கு சுவாமி சர்வ அலங்காரத்துடன் வைகுண்டபதி பெருமாள், ரங்கநாதபெருமாள், ஜெகநாதபெருமாள், வரதராஜபெருமாள், சீனிவாசப்பெருமாள், ஐந்து கருடசேவையில் எழுந்தருளினர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பின், நான்கு வீதிகளில் ஐந்து கருட சேவை உலாவும் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !