உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விருதையில் கருட சேவை: கலெக்டர் துவக்கி வைப்பு!

விருதையில் கருட சேவை: கலெக்டர் துவக்கி வைப்பு!

விருத்தாசலம்: கருடசேவை விழாவையொட்டி நடந்த பெருமாள் சுவாமிகள் வீதியுலாவை கலெக்டர் துவக்கி வைத்தார். விருத்தாசலத்தில் 16ம்  ஆண்டு பன்னிரு கருடசேவை விழா, நேற்று முன்தினம் காலை வாசவி மகாலில் சிறப்பு திருமஞசனத்துடன் துவங்கியது. இதையொட்டி, விரு த்தாசலம் ராஜகோபால சுவாமி, வரதராஜ பெருமாள், பட்டாபிராம பெருமாள், சாத்தியம் வரதராஜ பெருமாள், கோமங்கலம் லட்சுமி நாராயண  பெருமாள், எலவனாசூர்கோட்டை ராஜநாராயண பெருமாள் உட்பட 24 ஊர்களைச் சேர்ந்த பெருமாள் சுவாமிகளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது.  தொடர்ந்து, சாத்துக்கூடல் சாலை வரதராஜ பெருமாள் கோவிலிலிருந்து சுவாமி வீதியுலா நடந்தது. கலெக்டர் சுரேஷ்குமார் துவக்கி வைத்தார்.  ஒன்றிய சேர்மன் சுந்தரராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !