தீவனூர் ரங்கநாதர் அலங்கார வீதியுலா!
திண்டிவனம்: தீவனூர் பெருமாள் கோவிலில் ரங்கநாதர் அலங்கார வீதியுலா நடந்தது. திண்டிவனம் அடுத்த தீவனூர் ஆதிநாராயண பெருமாள் என்கிற லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் நேற்று முன்தினம் புரட்டாசி நான்காம் சனிக்கிழமையையொட்டி ரங்கநாதர் அலங்காரம் சேஷ வாகனத்தில் சுவாமி வீதியுலா நடந்தது. நேற்று முன்தினம் காலை 8 மணிக்கு மூலவர் மற்றும் உற்சவர் பெருமாள் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது. மாலை 6 மணிக்கு மூலவர் பெருமாள் சுவாமிக்கு ஆராதனைகள் செய்து, வெள்ளி கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலை 6.30 மணிக்கு உற்சவர் பெருமாள் சுவாமி ரங்கநாதர் அலங்காரம் சேஷ வாகனத்தில் வீதியுலா நிகழ்ச்சி நடந் தது. திண்டிவனம் நெல் மண்டி கோபி குடும்பத்தினர் மற்றும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை தர்மகர்த்தா நாமக்கார முனுசாமி செய்திருந்தார்.