இருளாயி அம்மன் முளைப்பாரி விழா
ADDED :4011 days ago
கடலாடி : இளஞ்செம்பூர் தம்புராட்டி அம்மன், முனியசாமி, இருளாயி அம்மன் புரட்டாசி முளைப்பாரி விழா நடந்தது. கிராம மக்கள் ஒரு வாரம் விரதமிருந்தனர். தினமும் ஆண், பெண் சேர்ந்து கும்பி தட்டி பாரிவளர்த்தனர். அம்மனுக்கு பொங்கலிட்டு சிறப்பு பூஜைகள் செய்தனர். பெண்கள் பால்குடம் எடுத்து வழிபட்டனர். பாரியை முக்கிய தெருக்கள் வழியாக ஊர்வலமாக எடுத்துச்சென்று கண்மாயில் கரைத்தனர். பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.