செஞ்சை புனித தெரசாள் ஆலய விழா
ADDED :4011 days ago
காரைக்குடி : காரைக்குடி அருகே செஞ்சை புனித தெரசாள் ஆலய விழா, கடந்த 3-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழா நாட்களில் திருச்செபமாலை செபமும், திருப்பலியும் நடந்தது. கடந்த 10ம் தேதி நற்கருணை பெருவிழாவும், நேற்று முன்தினம் திருப்பலியும், தொடர்ந்து தேர்பவனி பாதிரியார் இமானுவேல் தாசன் தலைமையில் நடந்தது. நேற்று காலை முதல் திரு விருந்து விழா, பாதிரியார்கள் அந்தோணி ராஜா, கிரிட்டோ ஜெயபால் தலைமையில் நடந்தது. ஏற்பாடுகளை செஞ்சை பாதிரியார் அந்தோணி சாமி, பங்கு பேரவையினர் செய்திருந்தனர்.