திட்டை குருபகவான் கோவிலில் சிறப்பு யாகம்
ADDED :4011 days ago
தஞ்சாவூர்: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, விரைவில் விடுதலையாக வேண்டி தெற்கு மாவட்ட மாணவர் அணி சார்பில், தஞ்சை திட்டை குருபகவான் கோவிலில் சிறப்பு யாகம் நடந்தது. தஞ்சை தெற்கு மாணவர் அணி செயலாளர் காந்தி முன்னிலையில் நடந்த யாகத்தில், எம்.பி., பிரசுராமன், எம்.எல்.ஏ.,க்கள ரெங்கசாமி, ரெத்தனசாமி, வக்கீல் பிரிவு இணைச் செயலாளர் தங்கப்பன், மேயர் சாவித்திரி, மாவட்ட பஞ்., தலைவர் அமுதா, முன்னாள் எம்.எல்.ஏ., ராமச்சந்திரன்,தொகுதி செயலாளர்கள் திருஞானம், கோவிந்தராஐன் உட்பட பலர் பங்கேற்றனர்.