பழநி பெருமாள் கோயில்களில் சிறப்பு பூஜை
ADDED :4011 days ago
பழநி : புரட்டாசி கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு, பழநி பகுதியிலுள்ள பெருமாள் கோயில்களில், ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர். பழநி லட்சுமி நாராயணப்பெருமாள் கோயிலில், காலை 6 மணிக்கு, பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், மலர் அலங்காரம், துளசி அர்ச்சனை செய்யப்பட்டது. ஆஞ்சநேயர் சன்னதி, கருடாழ்வார் சன்னதி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. பக்தர்களுக்கு தீர்த்தம், துளசி பிரசாதமாக வழங்கப்பட்டது. இதைப்போல காந்தி மார்க்கெட்டில் உள்ள வேணுகோபால கிருஷ்ண சுவாமிகோயில், பாலசமுத்திரம் அகோபில வரதராஜப் பெருமாள், தானாக வளர்ந்த கண்ணாடி பெருமாள் கோயில் உட்பட, அனைத்து பெருமாள் கோயில்களிலும், காலை 6 மணி முதல் பக்தர்கள் வழிபட்டனர்.