உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அகரம் முத்தாலம்மன் கோயில் விழா துவக்கம்

அகரம் முத்தாலம்மன் கோயில் விழா துவக்கம்

தாடிக்கொம்பு : தாடிக்கொம்பு அகரம் முத்தாலம்மன் கோயில்விழா நேற்று இரவு கண்திறப்பு மண்டபத்தில் சாமி சாட்டுதலுடன் விழா துவங்கியது. இன்று முதல் அக். 19 வரை கோயிலிலிருந்து பண்டார பெட்டியுடன் கொழு மண்டபத்திற்கு எழுந்தருளல் வைபவம் மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடக்கிறது. அக். 20ல் கண் திறப்பு வைபவத்தை தொடர்ந்து கொழு மண்டபத்தில் எழுந்தருளல் நடக்கிறது. இரவு 12 மணிக்கு வாண வேடிக்கை நடைபெறும். அக். 21 பகல் 1.30 மணியளவில் சொருகுபட்டை விமானத்தில், தாடிக்கொம்பில் உள்ள பூஞ்சோலை எழுந்தருளலுடன் விழா நிறைவடையும். பரம்பரை அறங்காவலர் மாரிமுத்து தலைமையிலான குழுவினர் விழா ஏற்பாடுகளை செய்துவருகின்றனர். பக்தர்களுக்கு குடிநீர் உள்ளிட்ட அடிப்டை வசதிகளுக்கான ஏற்பாடுகளை அகரம் பேரூராட்சி துணை தலைவர் சக்திவேல், தாடிக்கொம்பு பேரூராட்சி தலைவர் அன்புச்செல்வி மற்றும் பேரூராட்சி செயலர்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !