உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிருஷ்ண பெருமாள் கோவில் தேரோட்டம்

கிருஷ்ண பெருமாள் கோவில் தேரோட்டம்

இடைப்பாடி: கொங்கணாபுரம் அருகே, ரெட்டிபட்டியில் உள்ள கிருஷ்ணபெருமாள் கோவில் தேரோட்டம் நேற்று நடந்தது. கொங்கணாபுரம் அருகே, ரெட்டிபட்டியில் உள்ள கிருஷ்ணபெருமாள் கோவில் புரட்டாசி மாத உற்சவம் கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒரு வாரமாக ரெட்டிபட்டி, நாச்சூர், குரும்பப்பட்டி, காவடிகாரனூர், வெண்டனூர், மாலக்கட்டி வலவு உள்ளிட்ட பகுதிகளில் எருது உற்சவம் நடந்தது. நேற்று காலை, ரெட்டிபட்டி ஊர் முழுவதும் சுற்றிய தேர் காவடிகாரனூரிலிருந்து வந்த எருது, குதிரை ஆகியவைகளுடன் சேர்ந்த தேர், கிருஷ்ண பெருமாள் கோவிலுக்கு நேற்று காலை திரும்பியது. இதையடுத்து தேரோட்டம் நடந்தது. முன்னதாக, தேரோட்டத்தை சீரங்க கவுண்டர் வகையறா, தர்மகர்த்தா நாகப்பன், ஊர் கவுண்டர்கள் வெங்கடேஷ், செங்கோடன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !